தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/கடவுளைக் காண முடியுமா!

கடவுளைக் காண முடியுமா!

கடவுளைக் காண முடியுமா!


ADDED : ஜூன் 21, 2013 10:06 AM

Google News

ADDED : ஜூன் 21, 2013 10:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எல்லா இடங்களிலும் கடவுள் நிறைந்துஇருக்கிறார். காணும் எல்லாப் பொருள்களிலும் பரம்பொருளைக் காண முயலுங்கள்.

* குறிக்கோளுக்குச் செலுத்தும் முக்கியத்துவத்தை அதை அடைய மேற்கொள்ளும் பாதைக்கும் செலுத்துவது அவசியம்.

* நல்லதையே சிந்தியுங்கள். நல்லதை மட்டுமே செய்யுங்கள்.

* கண்டன வார்த்தை எதையும் சொல்ல வேண்டாம். உதடுகளை மூடிக் கொண்டு உங்கள் இதயங்களைத் திறந்து வையுங்கள்.

* விரிந்து கொண்டே செல்வது தான் வாழ்க்கை. மனம் குறுகிக் கொண்டு செல்வதை மரணம் என்று தான் சொல்ல வேண்டும்.

* சில நேரங்களில் துன்பமே மனிதனுக்கு சிறந்த ஆசிரியராக அமைந்து விடுகிறது.

* நல்ல மனிதனை உருவாக்குவதில் இன்பமும் துன்பமும் சரிசமமான இடத்தை வகிக்கின்றன.

* மனத்தூய்மை மிக்கவர்கள் இந்த பிறவியிலேயே கடவுளைக் காணும்பேறு பெறுகிறார்கள்.

- விவேகானந்தர்



Trending





      Dinamalar
      Follow us